உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

தேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

தேனி: ஆடி 2வது வெள்ளியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில்   அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி தபசு, 2வது வெள்ளியை முன்னிட்டு தேனி கவுமாரியம்மன் கோயில், கணேசகந்தபெருமாள் கோயில், மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயில், வேல்முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.
போடி:  போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயில், மலைமீதுள்ள வடமலைநாச்சியம்மன் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயில், போடி மேலத்தெரு சவுடேஸ்வரி அம்மன், நந்தவனம் காளியம்மன், சாலைக்காளியம்மன், புதுக்காலனி ஆதிபராசக்தி கோயில் உள்ளிட்ட கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை,  வளையல் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.  கூழ் காய்ச்சி வழங்கப்பட்டது.

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளி பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. சில்வார்பட்டி காளியம்மன்கோயில், குள்ளப்புரம் மருதகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முதலக்கம்பட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி, பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  தரிசித்தனர்.

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை கவுமாரியம்மன், கம்பம்ரோடு காளியம்மன், திரவுபதிஅம்மன், பள்ளத்து காளியம்மன், தண்டுப்பாளையம் காளியம்மன் கோயில்களில் ஆடி 2ம் வெள்ளியை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயில்,  அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், லோயர்கேம்ப் பகவதி அம்மன் கோயில்  உள்ளிட்ட கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை , அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனி நாகம்மாள் கோயிலில்  ஆடித்தபசு விழா நடந்தது.  மூன்று நாட்கள் நடந்த விழாவின் முதல் நாளில் கணபதி ேஹாமம் நடந்தது. பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆராதனைக்குப்பின் கரகத்திடலில் இருந்து அம்மன் ஊர்வலம் சென்றது. பக்தர்கள் அக்னி சட்டி,  பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அம்மனுக்கு 21 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பெண்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அம்மனை வழிபட்டு மூன்றாம் நாளில் விரதத்தை நிறைவு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !