மாமரத்துப்பட்டியில் கும்பாபிஷேகம்
ADDED :2743 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி 1 வது வார்டு மாமரத்துப்பட்டியில் பேச்சிவிரும்மன், மாயன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.ஜூலை 25 காலை 7.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, திருமறை பாராயணம் நடந்தது. தொடர்ந்து புனிதநீர் கொண்டு செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்தனர்.