சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவிலில் அம்பாள் வீதி உலா
ADDED :2631 days ago
சிவகாசி:சிவகாசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் ஆடித் தபசு விழாவில் 12 ம் நாளான நேற்று விஸ்வநாதர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். இக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும் காமதேனு , சிம்ம உள்ளிட்ட பல்வேறு வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிலையில் 12ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று அம்பாள் பூப்பல்லக்கிலும், விஸ்வநாதர் பிரியாவிடையுடனும் வீதி உலா வந்தனர். வான வேடிக்கை மற்றும் செண்டைமேளம் முழங்க வீதி உலா நடந்தது. சுப்பிரமணிய பட்டர் பூஜை செய்தார். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.