கருணாநிதி நலம் பெற வேண்டி கோவிலில் பிரார்த்தனை
ADDED :2623 days ago
இடைப்பாடி: தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால், சென்னை காவிரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடைப்பாடி அருகேயுள்ள, வேம்பனேரி பெருமாள் கோவிலில், அப்பகுதி மக்கள் நேற்று மாலை கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கருணாநிதி, நலம் பெற வேண்டி அர்ச்சனை செய்யப்பட்டது.