ஸ்ரீவி., திருஇருதய ஆலய விழா பவனி
ADDED :2623 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் ஆண்டுத்திருவிழா கொண்டாட்டம் மற்றும் நற்கருணை பவனி நடந்தது. இதற்கான விழா கடந்த ஜூலை 20ல் அப்போலின் அடிகள் திருக்கொடியேற்ற துவங்கியது. ஆடம்பர கூட்டுதிருப்பலியில் வட்டார அதிபர் அல்வரஸ் செபாஸ்டியன், உதவி பாதிரியார். அந்தோ ணி துரைராஜ் திருப்பலி நிறைவேற்றினர். இதையடுத்து தினமும் இரவு 7:00 மணிக்கு நவநாள் திருப்பலி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் (ஜூலை 29) இரவு 8 :00 மணிக்கு திருப்பலியுடன் நற்கருணை பவனி நடந்தது. ஆலயத்தில் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தடைந்தது. பாதிரியார் அந்தோணிபாக்கியம் மறைவுரை யாற்றினார். ஏற்பாடுகளை வட்டார அதிபர் அல்வரஸ் செபஸ்தியன், உதவி பாதிரியார் அந்தோணிதுரைராஜ் மற்றும் அருட்சகோதர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.