உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா ஆக.5ல் கொடியேற்றம்

ஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா ஆக.5ல் கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா ஆக., 5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆக., 13ல் தேரோட்டம் நடக்கிறது.ஆக.,5 காலை 9:00 மணிக்குமேல் கொடியேற்றம் நடக்கிறது. ஐந்தாம் நாளான ஆக.,9 காலை 10:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனம், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருடசேவை நடக்கிறது. ஆக.,11 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன்கோவிலில் ரெங்கமன்னார் சயன திருக்கோல உற்ஸவம் நடக்கிறது. ஆக.,13 காலை 7:20 மணிக்கு ஆண்டாள் தேரோட்டம் நடக்கிறது.12 நாள் விழாவில் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், இரவு 7:00 மணிக்கு வீதி உலா, மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 வரை சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, நாமசங்கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் பட்டர்கள், அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !