சுப்ரமணிய சுவாமி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
ADDED :2736 days ago
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் மஹா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாதத்தில் வரும் முதல் மஹா சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகருக்கு பல்வேறு வகையான அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார வழிபாடும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார்.