உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கீத சித்திவிநாயகருக்கு மண்டல அபிஷேக விழா

சங்கீத சித்திவிநாயகருக்கு மண்டல அபிஷேக விழா

கோவை: நஞ்சுண்டாபுரத்திலுள்ள, சங்கீத சித்திவிநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா நேற்று நிறைவடைந்தது.ராமநாதபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரத்தில், சங்கீத சித்தி விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் மராமத்துப்பணிகள் நிறைவடைந்து, ராஜகோபுர திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேகம் நிறைவடைந்தது. கும்பாபிஷேகம் நிறைவடைந்து, நேற்றுடன் 48 நாளாகிறது. இதையொட்டி, மண்டல அபிஷேகம் நேற்று காலை 8:00 மணிக்கு, மங்கள இசையுடன் துவங்கியது. விநாயகர் வழிபாடு, புன்யாகவாஜனம், பஞ்சகவ்யம், கலசஸ்தானம், மகாகணபதி ஹோமம் ஆகியவை நடந்தன. காலை 10:00 மணிக்கு பூர்ணாஹூதியும்,சகலவித திரவிய அபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம், 11:00 மணிக்கு மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !