உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பொற்றாமரை குளத்துக்கு தண்ணீர் திறப்பு

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பொற்றாமரை குளத்துக்கு தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான, பொற்றாமரை குளம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழாவின் போது, பொற்றாமரை குளத்திலும் பக்தர்கள் நீராடுவர். சிறப்பு பெற்ற பொற்றாமரை குளம், தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.மகாமக பெருவிழாவின் போது, காவிரி ஆற்றில் இருந்து, பொற்றாமரை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக, 1 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டிருந்த போதிலும், காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால், குளத்தில் தண்ணீர் நிரப்பவில்லை.தற்போது, தனியார் வங்கி நிதியுதவியுடன், கும்பகோணம் சோலையப்பன் தெருவில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறை பகுதியில், 7.5 குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்ப் செட் அமைத்து, பொற்றாமரை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இன்னும், ஒரு வாரத்தில், பொற்றாமரை குளம் நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !