உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மனுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

மகா மாரியம்மனுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

கம்மாபுரம்: ஆடி திருவிழாவையொட்டி, கம்மாபுரம் மகா மாரியம்மனுக்கு, ஒரு லட்சம் ரூபாயில் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. கம்மாபுரம் மகா மாரியம்மன் கோவிலில், கடந்த 30ம் தேதி காப்பு காட்டும் நிகழ்ச்சியுடன் ஆடி திருவிழா துவங்கியது. தினமும், காலை, மாலை அபிேஷக, ஆராதனையும், இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. நேற்று முன்தினம் இரண்டாம் நாள் உபயமாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், நேற்று மூன்றாம் நாள் உபயமாக 10, 50, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளால் ஒரு லட்சம் ரூபாயில் அம்மனை அலங்கரித்து வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !