சிங்ககொடி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா
ADDED :2623 days ago
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள அ. நெடுங்குளத்தில் சிங்ககொடி அம்மன் கோயிலில் கிராம மக்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் முளைப்பாரி திருவிழாவை நடத்தினர். இதற்காக 10 நாட்களுக்கு முன்பு 100 க்கும் மேற்பட்ட முளைப்பாரிகள் வளர்க்கப்பட்டன. காப்புக் கட்டி, பெண்கள் விரதமிருந்து அம்மனை வழிபட்டனர். நேற்று (ஆகஸ்ட் 1)ல் மாலைமுக்கிய வீதிகளின் வழியாக, கிராம மக்கள் முளைப்பாரிகள் எடுத்துசென்று கண்மாயில் கரைத்தனர். பின்பு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. பிராமணகுறிச்சி, முனைவென்றி, கீழாயக்குடி உட்பட பலகிராமங்களில், முளைப்பாரி விழா நடைபெற்றது.