உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு பண்டிகை கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடிப்பெருக்கு பண்டிகை கோவில்களில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில், ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, நாளை சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையம் அழகு திருமலைராயப்பெருமாள் கோவிலில், ஆடி நோன்பு ஆண்டாள் திருவிழா நாளை, (3ம் தேதி) நடக்கிறது.விழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு, திருப்பாவை, நாச்சியார் திருமொழி மற்றும், 11:00 மணிக்கு, ராமாயணத்தில் வீர ஆஞ்சநேயர் என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. ஆடி அமாவாசையையொட்டி, வரும், 11ம் தேதி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கப்பளாங்கரை பார்வதி உடனமர் பரமசிவன் திருக்கோவிலில், நாளை, (3ம் தேதி) ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு சிவபெருமானுக்கு பூஜை, மகாதீபாராதனை, திருவீதி உலா நிகழ்ச்சியும், அன்னதானமும் நடக்கிறது. ஆழியாறு, அம்பராம்பாளையம், ஆனைமலையில் ஆற்றுப்படுகையில், நாளை ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, குடும்பத்தில் இறந்த மூதாதையர்களுக்கு திதி செலுத்தும் நிகழ்ச்சி, கன்னிமார் வழிபாடு நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !