உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருணன் விட்ட கடலை வற்றச் செய்த கதை

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த கதை

அபிஷேகப் பாண்டியன் சித்திரை மாதத்துச் சித்தரை நட்சத்திரத்தில் சிவபூஜை செய்வது வழக்கம். பாண்டியனின் பூஜை முடிந்த பின் தான் இந்திரன் பூஜை செய்ய முடியும் இப்பூஜையை இந்திரன் செய்யத் தொடங்கிய விவரம் முதல் திருவிளையாடலில் உள்ளது

அன்று பாண்டியனின் பூஜை முடிய அதிக நேரம் ஆகிவிட்டதால், அதன் பின் தன் பூஜையை முடித்துத் தன் பொன் உலகு திரும்பினான் இந்திரன் இதை அறிந்த வருணன், "மதுரையில் உள்ள சொக்கலிங்கம் தான் மற்ற லிங்கங்களில் பெரிதோ? என்று கேட்க அதன் பெருமைகளை இந்திரன் கூறினான். இதனைச் சோதித்தறிய முடிவு செய்து கொண்டான் வருணன். "மதுரையை அழி என்று கடலிற்குக் கட்டளை இட்டான். கடல் பொங்கிப் பாய்ந்தது. உலகமே நடுங்கியது. பிரம்ம கற்பத்திலும் அழியாது இருந்த மதுரைக்கு இன்று அழிவு வந்ததோ என்று அஞ்சினர். பாண்யன் பயந்து இறைவனைச் சரணடைந்தான்.

பாண்டியன் முன் தோன்றினார் சிவபெருமான், புன்னகை புரிந்தார். அபயம் தந்தார். தன் திருச்சபையில் உள்ள நான்கு மேகங்களை அழைத்து "மதுரையை அழிக்க வரும் கடலை வற்றுமாறு விரைந்து சென்று பருகுங்கள்! என்று ஆணையிட்டார். உடனே நான்கு மேகங்களும் நிமிர்ந்து முழங்கி கடல் நீரை உறிஞ்சின. கடல் வற்றியது, வறண்டது. மதுரை நகர் காக்கப்பட்டது. சொக்கலிங்கத்தின் பெருமையையும், திருவிளையாடலையும் உணர்ந்தான் வருணன்.

மதுரைக்காண்டம் முற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !