செங்கழனி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன்
ADDED :2622 days ago
விருத்தாசலம்: பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் சுமந்து, செடல் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக இன்று காலை 10:00 மணியளவில் மணிமுக்தாற்றில் இருந்து ஏராளமானோர் தீச்சட்டி, பால்குடம், காவடி சுமந்தும், செடல் அணிந்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.