திருப்பதியில் இலங்கை பிரதமர் சுவாமி தரிசனம்
ADDED :2618 days ago
திருப்பதி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று தனது மனைவி மைத்திரியுடன் திருமலை திருப்பதியில் சீனிவாசப்பெருமாளை தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அவருடைய மனைவி மைத்ரி விக்ரமசிங்கே ஆகியோர் மாலை சென்னை வந்தனர். அங்கிருந்து திருப்பதிக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார். நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை, இலங்கை பிரதமர் மனைவியுடன் சீனிவாசப்பெருமாளை தரிசனம் செய்தார்.