மந்தை கருப்புசாமி கோயிலில் விளக்கு பூஜை
ADDED :2620 days ago
சோழவந்தான்,சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லுார் மந்தை கருப்புசாமி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆடி திருவிழா மூன்று நாட்கள் நடந்தன. முக்கிய நிகழ்வாக திருவிளக்கு பூஜையை விவேகானந்தா கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்த மகராஜ் துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள், விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தன.