மப்பேடு கோவிலில் நாளை தீ மிதி திருவிழா
ADDED :2621 days ago
மப்பேடு: மப்பேடு ஓசூரம்மன் கோவிலில், இந்த ஆண்டு, தீ மிதி திருவிழா, நாளை, நடைபெற உள்ளது. முன்னதாக, தீ மிதி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள், 27ம் தேதி காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். நாளை, ஆடி திருவிழாவின் தீ மிதி திருவிழா நடைபெற உள்ளது. இரவு ஓசூரம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடைபெறும். பின், 6ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, விடார்த்தி உற்சவத்துடன் ஆடி திருவிழா நிறைவு பெறும். இதேபோல், மப்பேடு ஊராட்சிக்குட்பட்ட விஸ்வநாதகுப்பம் பகுதியில் உள்ள ஓசூரம்மன் கோவிலும், ஆடி திருவிழாவை முன்னிட்டு, நாளை, மாலை, 6:30 மணிக்கு தீ மிதி திருவிழா நடைபெற உள்ளது.