உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனீஸ்வரர் கோவிலில் மாவிளக்கு வழிபாடு

முனீஸ்வரர் கோவிலில் மாவிளக்கு வழிபாடு

மேட்டுப்பாளையம்: ஓடந்துறை ஊராட்சி, ஊமப்பாளையத்தில் பழமையான முனீஸ்வரன் கோவில் உள்ளது. கடந்த, 2ல் பூச்சாட்டுடன் உற்சவ பெருவிழா துவங்கியது. கடந்த, 8ம் தேதி இரவு பவானி ஆற்றில் இருந்து முனீஸ்வரர் சுவாமியை அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து முனீஸ்வரன் சுவாமிக்கு படைத்தனர். கிடா வெட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூசாரிகள் பெரிய ராமமூர்த்தி, சின்ன ராமமூர்த்தி ஆகியோர் முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். ரங்கசாமி, செல்வம் ஆகியோர் சுவாமியின் ஆபரணங்களுடன் ஆடி வந்தனர்.ஊராட்சி முன்னாள் தலைவர்கள் சண்முகம், லிங்கம்மாள், ஊர்கவுடர் செல்வராஜ், வெங்கடாசலம், தங்கவேலு, மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !