திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்
ADDED :2814 days ago
பண்ருட்டி: பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் 5ம் நாள் உற்சவம் முன்னிட்டு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி கொடியேற்று விழா நடந்தது. நேற்று திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 5:30 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடந்தது. ஆடிப்பூரம் 5ம் நாள் உற்சவத்தையொட்டி, அம்பாள் பெரியநாயகி வெள்ளி ரிஷப வாகனத்தில் உள்புறப்பாடு நடந்தது. அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.