உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி கருப்பராயன் கோவிலில் ஆடிப்பொங்கல் விழா

அவிநாசி கருப்பராயன் கோவிலில் ஆடிப்பொங்கல் விழா

அவிநாசி: அவிநாசி அருகே கருப்பராயன் கோவிலில், ஆடிப்பொங்கல் விழா நடந்தது. நம்பியாம்பாளையம் ஊராட்சி, சுண்டக்காம்பாளையத்தில் உள்ள கருப்பராயன் கோவிலில், ஆடிப்பொங்கல் விழா நடந்தது. காலை முதல், கருப்பராயனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள், பொங்கல் வைத்து, கருப்பராயனை வழிபட்டனர். பலர் ஆட்டுக்கிடா வெட்டி, நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !