உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை வழிபாடு

மாசாணியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை வழிபாடு

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, இன்று இரவு கோவில் நடை திறந்திருக்கும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, அமாவாசை உள்ளிட்ட விசஷே தினங்களில், பக்தர்கள் வருகை அதிகமுள்ளது. நாளை, (11ம் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அம்மனை தரிசித்து செல்ல வசதியாக, இன்று, (10ம் தேதி) இரவு கோவில் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதிகாரிகள் கூறுகையில், ஆடி அமாவாசைக்கு பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வசதியாக, 10ம் தேதி இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்படுள்ளது. போலீசார், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள், என்றனர்.அமாவாசை வழிபாட்டில், நாளை காலை, 6:30 மணிக்கு முதல் கால பூஜை; 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை; மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் மாலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !