உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி வேதநாயகி அம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம்

உலக நன்மை வேண்டி வேதநாயகி அம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம்

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள வேதநாயகி அம்மனுக்கு நேற்று, 1,008 பால்குட அபிஷேகம், லலிதா சகஸ்ர நாம யாகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. ஆடிமாத கடைசி வெள்ளியான நேற்று, உலக நன்மை வேண்டி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள வேதநாயகி அம்மனுக்கு காலை, 7:30 மணிக்கு கணபதி பூஜை, பின்னர் லலிதா சகஸ்ர நாம யாகம் நடந்தது. பின்னர், அம்மனுக்கு, 1,008 பால்குட அபி?ஷகம் நடந்தது. பவானி, காளிங்க ராயன்பாளையம், குமாரபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். மாலையில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !