உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் உண்டியலில் ரூ. 7.42 லட்சம் காணிக்கை

காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் உண்டியலில் ரூ. 7.42 லட்சம் காணிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் உண்டியலில், ஏழு லட்சத்து, 42 ஆயிரத்து, 736 ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் உள்ள, இந்துசமய அறநிலையத்துறையின் கீழ், முருகன் கோவில் உள்ளது. இங்கு, தைப் பூசத்திருவிழா, ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடப்பது வழக்கம். இங்கு ஆண்டுக்கு, ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. கிருத்திகை திருவிழா முடிந்து, நேற்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா தலைமை வகித்தார். உண்டியலில், ஏழு லட்சத்து, 42 ஆயிரத்து, 736 ரூபாயும், 29.500 கிராம் தங்கமும், 320 கிராம் வெள்ளியும் இருந்தது. சரக ஆய்வாளர் சத்யா, பரம்பரை அறங்காவலர் சுதர்சன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !