ஆடி வெள்ளிக்கிழமை: கிருஷ்ணராயபுரம் அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :2630 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் பகுதி அம்மன் கோவில்களில் நேற்று ஆடிவெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு நவதானியத்தில் சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இதில், லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, வல்லம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மாலையில் கோவில் வளாகத்தில், திருவிளக்கு பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.