பிரணவ மந்திரம் ’ஓம்’ என்பதன் சிறப்பு என்ன?
ADDED :2661 days ago
எல்லா மொழிக்கும் முன்னே தோன்றியது வேதம். சொல், எழுத்துக்கு அப்பாற்பட்டு ஒலி வடிவில் வேதத்தை வெளிப்படுத்திய இறைவன் முதலில் உச்சரித்த ஒலி நாதமே பிரணவம் என்னும் ’ஓம்’. எந்த கடவுளுக்குரிய மூல மந்திரத்தையும்,’ ஓம்’ என்று சொல்லியே தொடங்குவர். பிராணயாமப் பயிற்சியின் போது இதை உச்சரித்தால் நோய் நீங்கும்.