உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வழிபாட்டில் கூழ் ஏன்?

ஆடி வழிபாட்டில் கூழ் ஏன்?

’ஆடி’ என்றதும் அம்மனோடு கூழும் நினைவுக்கு வரும். வழிபாட்டில் கூழ் ஏன் இடம்பெற வேண்டும்? கோடை காலத்து க்கும், மழை காலத்துக்கும் இடையில் வரும் ஆடியில் வெயிலும், காற்றும் கலந்திருக்கும். இதனால் நோய்கள் பரவும். நோயிலிருந்து தப்பிக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தடுப்பு மருந்து வெங்காயமும், மோர் கலந்த கூழும் தான். இதை உணர்ந்த முன்னோர், நம் அனைவரையும் கூழ் குடிக்க வைக்க எடுத்த முயற்சியே அம்மனுக்கு கூழ் ஊற்றும் வழக்கம். ஒரு மகத்தான உணவை பல தலைமுறைக்கு கொண்டு செல்லும் இந்த முயற்சியால் ’கூல்’ ஆகிறது கூழ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !