மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
ADDED :2661 days ago
மனம் போன போக்கில் நடப்பவர்களை முட்டாள்கள் என்கிறார் நாயகம். எனவே, மனதை கட்டுப்படுத்தி வாழ பழகிக் கொள்ள வேண்டும். மனதை அடக்கி ஆள்வதற்கு வார்த்தைகளை அளந்து பேச கற்றுக்கொள்ள வேண்டும். நாக்கு நேர்மையானதை மட்டுமே பேச வேண்டும். அப்போது தான் இதயமும் நேர்மையான வழியில் செல்லும். வார்த்தைகள் மோசமாக இருந்தால் முடிவுகளும் மோசமாகவே இருக்கும். ஏதேனும் ஒரு செயலைச் செய்ய விரும்பும்போது முதலில் அதன் முடிவை எண்ணிப் பார்க்க வேண்டும். பிறரிடம் ஆலோசனை கேட்கக்கூடாது. உங்கள் மனதிற்கு அதன் முடிவு நல்லதாக அமையும் என தெரிந்தால் மட்டுமே செயலில் ஈடுபட வேண்டும். இப்படி நம் மனதை நாமே கட்டுப்படுத்திக் கொண்டால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்கிறார்.