புற்றுமாரியம்மன் கோவிலில் 18ம் ஆண்டு பால் குட ஊர்வலம்
ADDED :2619 days ago
குளித்தலை: குளித்தலை அருகே, புற்றுமாரியம்மன் கோவில், 18ம் ஆண்டு பால் குட ஊர்வலம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.குளித்தலை, கடம்பன்துறை காவிரிஆற்றில் இருந்து பக்தர்கள் பால் குடம் எடுத்து, அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். கடம்பர்கோவில், பேராளகுந்தாளம்மன், மாரியம்மன் கோவில், ஆகிய கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தண்ணீர்பள்ளி, பரளி, கருங்களாபள்ளி வழியாக பக்தர்கள், கணக்கபிள்ளையூர் புற்று மாரியம்மன்கோவிலுக்கு ஊர்வலம் வந்தடைந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து வழிபட்டனர். இந்த ஊர்வலத்தில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாக் குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.