காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 17ல் கும்பாபிஷேகம்
ADDED :2619 days ago
ராசிபுரம்: ராசிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபி ?ஷகம், 17ல் நடக்கிறது. ராசிபுரம், ஆத்தூர் பிரதான சாலையில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இதன் அஷ்டபந்தன கும்பாபி ?ஷக விழா, வரும், 17ல் நடக்கிறது. முன்னதாக, 15ல் மங்கள இசை, கணபதி ?ஹாமத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து வாஸ்து சாந்தி பூஜை, தீபாராதனை நடக்கிறது. 16ல் இரண்டாம் கால பூஜை, வேதபாராயணம், இரவு, 8:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, மருந்து சாற்றுதல் நடக்கவுள்ளது. வரும், 17 காலை நான்காம் கால பூஜை, நாடி சந்தானம், கடம் புறப்பாடு, 7:00 மணிக்கு மேல் கும்பாபி ?ஷகம் நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை, அன்னதானம் வழங்கப்படும். மதியம், 12:00 மணிக்கு மேல், ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம், தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.