உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சிக்கு ஒரு லட்சம் வளையல் அலங்காரம்

மீனாட்சிக்கு ஒரு லட்சம் வளையல் அலங்காரம்

திருநகர், மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயில் மீனாட்சி அம்மனுக்கு நாளை (ஆக.,13) ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம் நடக்கிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்று மாலையில் கோவர்த்தனாம்பிகை  அம்பாளுக்கு அபிஷேகம், பூஜைகள் முடிந்து வளையல் அலங்காரம் நடக்கும் திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர் மீனாட்சி அம்மனுக்கு மாலை 6:00 மணிக்கு பூஜைகள் முடிந்து ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரமாகி  அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !