சிவகாசி கோயிலில் ஆடி அமாவாசை யாகம்
ADDED :2625 days ago
சிவகாசி:சிவகாசி நகரில் முதன் முறையாக மக்கள் நலனுக்காக ஸ்ரீபேச்சியம்மன் கோயிலில் ஸ்ரீ மஹா பிரித்தியங்கரா அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நகரில் தொழில்கள் சந்தித்து வரும் சோதனைகள் நீங்கி வளம் பெறவும், தோஷங்களை நீக்கவும் ஆடி அமாவாசை யாகம் நடந்தது. 108 யாக பொருட்கள் , ஒரு லட்சம் மூல பீஜாட்சர மந்திர ஆவர்த்தியும் கொண்ட யாகம் ஸ்ரீபேச்சியம்மன் கோயிலில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீபேச்சியம்மன் ஆலய நிர்வாகத்தினர் செய்தனர்.