உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிமாருக்கு பூஜை: மழையால் நெகிழ்ச்சி

கன்னிமாருக்கு பூஜை: மழையால் நெகிழ்ச்சி

வாழப்பாடி: வாழப்பாடி அருகே, மாரியம்மன்புதூர் மக்கள், கோதுமலை உச்சியிலுள்ள கன்னிமார் கோவிலில், மழை வேண்டி, நேற்று, சிறப்பு பூஜை நடத்த முடிவு செய்திருந்தனர். அதன்படி, காலை, 7:00 மணிக்கு மேல், பூஜை பொருட்களுடன், குதிரையை அலங்கரித்து,  மேள வாத்தியம் முழங்க, ஒற்றையடி பாதையில், கோவிலுக்கு சென்றனர். அங்கு, பூஜை செய்துவிட்டு, மாலை ஊருக்குள் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, மழை பெய்ததால், வேண்டுதல் நிறைவேறியதாக கருதி, மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !