உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்கள் பங்கேற்கும் கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழா 3,500 கிடாக்கள் நேர்த்திக் கடன்

ஆண்கள் பங்கேற்கும் கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழா 3,500 கிடாக்கள் நேர்த்திக் கடன்

வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழாவில் 3,500 கிடாக்கள் நேர்த்திகடனாக வழங்கப்பட்டது. விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயிலில் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு சாமி  அலங்கார பெட்டி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இரவு 2:00 மணிக்கு காவல் தெய்வத்திற்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதிகாலை 4:00 மணிக்கு பக்தர்களால் சாமிக்கு நேர்த்தி கடனாக செலுத்தப்பட்ட 3,500 கிடாக்கள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக  வழங்கப்பட்டது. வனத்துறை அமைச்சர் சீனிவாசன் விழாவில் பங்கேற்றார். விடிய, விடிய நடந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்கும் வழக்கம் இல்லை. ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதில்லை. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.  வத்தலக்குண்டில் இருந்து இரவு முழுவதும் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நிலக்கோட்டை டி.எஸ்.பி., பொன்னுச்சாமி, வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர்  ஜெயச்சந்திரன், உதவி ஆணையர் காளிமுத்து, செயல் அலுவலர் சந்திரசேகர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !