மாரியம்மன் கோவில் ஆடிப்பூரத்திருவிழா
ADDED :2716 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - சேலம் ரோடு தியாகி தங்கவேல் கவுண்டர் நகரில் உள்ள மாரியம்மன் கோவில், 12வது ஆடிப்பூரத் திருவிழா நடக்க உள்ளது. விழாவையோட்டி, இன்று காலை மங்கள இசை, கலசாபி?ஷகம், லலிதா அஷ்டோத்ர சதநாமவளி புஷ்பார்ச்சனை நடக்கிறது. நாளை மதியம், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நடக்கிறது. 15ல் காலை, அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், மதியம் அம்மன் நகர்வலம், அன்னதானம் நடக்கிறது. 16ல் காலை, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.