15ல் ஏக தின திவ்ய பிரபந்த பாராயணம்
ADDED :2659 days ago
சென்னை:அருளிச்செயல் கைங்கரிய சபா சார்பில், 10ம் ஆண்டு, ஏக தின திவ்ய பிரபந்த பாராயணம், 15ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை, மேற்கு மாம்பலம், திருவேங்கடம் தெருவில் உள்ள, ஸ்ரீநாத் கல்யாண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியில், 15ம் தேதி காலை, 6:00 மணிக்கு, பெருமாள் திருவாராதனம், மந்த்ர புஷ்பம், திவ்ய பிரபந்த பாராயண துவக்கம்; இரவு, 7:00 மணிக்கு, வேத திவ்ய பிரபந்த சாற்று மறை, தீர்த்த ஸடாரி கோஷ்டி, வித்வத் சம்பாவனை நடைபெற உள்ளன.