உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியமாரியம்மன் கோவில் ஆடிப்பூரத் திருவிழா

பெரியமாரியம்மன் கோவில் ஆடிப்பூரத் திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மேல்புதூரில், பெரியமாரியம்மன் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள மேல்புதூர் பெரியமாரியம்மன் கோவில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த, 5 காலை அம்மனுக்கு அபிஷேகம், கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அம்மன் ஊர்வலம் நடந்து வந்தது. 11ல் காலை அம்மன் அலங்காரம், மதியம் மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், பூ மிதித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று, தீ மிதித்தல் நிகழ்ச்சியும், இரவு அர்ச்சுனன் தபசு நாடகமும் நடந்தது. 18 வரை, தினமும் இரவில் பல்வேறு நாடகங்கள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !