உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொத்தாம்பாக்கத்தில் இன்று செடல் திருவிழா

கொத்தாம்பாக்கத்தில் இன்று செடல் திருவிழா

கண்டமங்கலம்: கொத்தாம்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில், 108 பால்குட அபிஷேகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தாம்பாக்கம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மகோற்சவம், கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. இன்று 14ம் தேதி, மதியம் 12:௦௦ மணிக்கு, சாகைவார்த்தல் நிகழ்ச்சியும், மதியம் 2:௦௦ மணிக்கு,
செடல் உற்சவமும், 3:௦௦ மணிக்கு, ஊரணி பொங்கலிடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.இரவில், முத்துமாரியம்மன் முத்துப்பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, கொத்தம்பாக்கம் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !