ஜப்பான் நகரத்திற்கு ஹிந்து கடவுள் பெயர்
ADDED :2609 days ago
பெங்களூரு: ஜப்பானில் உள்ள நகரத்திற்கு, ஹிந்து கடவுள் லட்சுமியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தலைநகர், பெங்களூரில் உள்ள, தயானந்த் சாகர் கல்லுாரியில் நடந்தபட்டமளிப்பு விழாவில், இந்தியாவிற்கான ஜப்பான் துாதர், டகாயுகி கிட்டகவா பேசியதாவது:ஜப்பான் தலைநகர், டோக்கியோவுக்கு அருகே உள்ள, ஒரு நகரத்திற்கு, கிச்சியோஜி என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு, ஜப்பானிய மொழியில், லட்சுமி கோவில் என, பெயர். ஜப்பானில், ஹிந்து கடவுள்களுக்கு பல கோவில்கள் உள்ளன. பல காலமாக, நாங்கள், ஹிந்து கடவுள்களை வழிபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.