சித்தி விநாயகர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
ADDED :2609 days ago
காட்பாடி: வேலூர் மாவட்டம், காட்பாடி, வி.ஜி., ராவ் நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை, நேற்று மாலை நடந்தது. சித்தி விநாயகர் கோவில் பக்தசபை சார்பில், நடத்தப்பட்ட இந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.