உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்திற்கு நடைபயணம் வந்த கோல்கட்டா பக்தர்கள்

ராமேஸ்வரத்திற்கு நடைபயணம் வந்த கோல்கட்டா பக்தர்கள்

ராமேஸ்வரம்: கொல்கத்தா பக்தர்கள் மதுரையில் இருந்து கங்கை நீருடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு புனித யாத்திரை பயணம் மேற்கொண்டனர். கொல்கத்தா இந்து அமைப்பு சேர்ந்த சோமேஷ் தலைமையில் 9 பக்தர்கள் கலசத்தில் புனித கங்கை நீரை எடுத்து கொண்டு ரயிலில் மதுரை வந்தனர். பின் ஆக.,9ல் மதுரையில் இருந்து கங்கை நீருடன் புனித யாத்திரை பயணம் மேற்கொண்ட பக்தர்கள், பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக 180 கி.மீ.,துாரம் நடந்து நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். பின் கோல்கட்டா பக்தரகள் கங்கை நீரை கோயிலில் சுவாமி சன்னதியில் அபிேஷகம் செய்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !