உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரவிந்தரின் 146வது பிறந்த தினம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அரவிந்தரின் 146வது பிறந்த தினம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

புதுச்சேரி: அர­விந்­த­ரின் 146வது பிறந்த தினத்­தை­யொட்டி, ஆசி­ர­மத்­தில் அவர் தங்­கி­யி­ருந்த அறையை நேற்று ஏரா­ள­மா­னோர் தரி­ச­னம் செய்­த­னர். புதுச்­சேரி அர­விந்­தர் ஆசி­ர­மத்­தில், அர­விந்­த­ரின் 146 பிறந்த நாள் விழா நேற்று நடந்­தது. அதி­காலை 4.00 மணிக்கு ஆசி­ர­மம் திறக்­கப்­பட்டு, தன்­னார்­வ­லர்­கள் தரி­ச­னத்­திற்கு அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். பின், அர­விந்­தர் அறை தரி­ச­னத்­திற்­கான நுழை­வுச்­சீட்டு, ஆசி­ர­மம் அரு­கி­லுள்ள தபால் நிலைய வாயி­லில் வழங்­கப்­பட்­டது.
அனு­மதி சீட்டு பெற்­ற­வர்­கள் காலை 6.00 மணி முதல், ஆசி­ர­மம் பின்­பு­றம் உள்ள செயின்ட் ழீல் வீதி­யில் இருக்­கும் சிறப்பு வாயில் வழி­யாக ஆசி­ர­மத்­தின் உள்ளே அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். ஆசி­ர­மத்­தின் மேல் தளத்­தில், அர­விந்­தர் தங்­கி­யி­ருந்த அறையை பக்­தர்­கள் தரி­ச­னம் செய்­த­னர். பிறகு, அன்னை சமா­தி­யில் தரி­ச­னம் மற்­றும் தியா­னம் செய்­த­னர். மாலை­யில், லா தெ லொரீஸ்­தோன் வீதி, செயின்ட் லுாயி வீதி சந்­திப்­பில் உள்ள ஆசி­ரம விளை­யாட்டு மைதா­னத்­தில், 6 முதல் 80 வயது வரை­யி­லான ஆசி­ர­ம­வா­சி­கள் பபங்­கேற்ற, பேண்டு இசை­யு­டன் கூடிய அணி­வ­குப்பு நடந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !