நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம்
ADDED :2658 days ago
நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் நேற்று மாலை நடந்த சந்தனம் பூசும் வைபவம் மற்றும் சிறப்பு துவாவில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். நாகை அடுத்த நாகூரில், பிரசித்திப் பெற்ற, செய்யது அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது காதிர் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் உள்ள, நாகூர் ஆண்டவரின் மகன் முகம்மது யூசுப் சன்னதியில், நேற்று முன்தினம் மாலை பரம்பரை கலிபா துவா ஓதிய பின், சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. இதை முன்னிட்டு தர்கா அலங்கார வாசலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், காய்கள், பழங்கள் மற்றும் பல்வேறுவிதமான பொருட்களை கட்டி, யாத்ரீகர்கள் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.