உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீச்சட்டி, கஞ்சி கலய ஊர்வலம்

தீச்சட்டி, கஞ்சி கலய ஊர்வலம்

ஓசூர்: ஓசூரில், தீச்சட்டி மற்றும் கஞ்சி கலைய ஊர்வலம் நேற்று நடந்தது. ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள, ஓம்சக்தி கோவிலுக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம், ஊர் பொதுமக்கள் தீச்சட்டி மற்றும் கஞ்சி கலயத்தை ஊர்வலமாக எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். 30வது ஆண்டை முன்னிட்டு, நேற்று காலை, 100 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் தீச்சட்டி, கஞ்சி கலயம் ஆகியவற்றை தலையில் சுமந்து, தேர்ப்பேட்டை பகுதியில் ஊர்வலமாக சென்றனர். பின் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !