ஆனைமலை கோவிலில் சமபந்தி விருந்து
ADDED :2652 days ago
ஆனைமலை, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. நிகழ்ச்சியில், 400 பேர் கலந்து கொண்டனர். மேலும், 1,200 பேருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக சேலை வழங்கப்பட்டது. இதற்கு, கோவை இணை இயக்குனர் கனிமம் தலைமை வகித்தார். மாசாணியம்மன் கோவில் உதவி இயக்குனர் ஆனந்த் மற்றும் கண்காணிப்பாளர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.