உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருப்பூர் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருப்பூர்: திருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரம் மெயின் ரோடு தியாகி குமரன் காலனியில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, கலசங்கள் புறப்பாடு, ஆலய பிரதட்சணம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கூனம்பட்டி ஆதீன திருமடம் நடராஜ சுவாமி தலைமையில், மூலவர் மற்றும் பரிவார கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதன்பின், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை, தச தானம், தச தரிசனம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !