துணை முதல்வர் ஏற்பாட்டில் கும்பாபிஷேகப் பணி ஜரூர்
ADDED :2651 days ago
பழநி: பழநி வடக்குகிரி வீதியிலுள்ள தொட்டிச்சியம்மன், மாரத்தியம்மன் கோயிலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நிதி உதவியுடன் கும்பாபிஷேக பணிகள் நடக்கிறது. பழநி முருகன்கோயிலைச் சேர்ந்த வடக்குகிரி வீதியிலுள்ள தொட்டிச்சியம்மன், மாரத்தியம்மன் கோயில் பலநுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் முன்னோர்கள் பல ஆண்டுகளாக வழிபடுகின்றனர். இதன்காரணமாக பழநிக்கு வரும்போது துணை முதல்வர் மறவாமல் இந்தகோயிலில் வழிபடுவார். இந்தநிலையில் அவரது உதவியுடன் ரூ. 9.5 லட்சம் செலவில் தற்போது கோயிலில் புதுப்பித்து சுற்றிலும் கம்பிவேலிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடக்கிறது. இரண்டு ஒருவாரத்தில் பணிகள் முடிக்கப்பட உள்ளது. விரைவில் கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.