உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலவாக்கரைவாடியில் தேர் திருவிழா

அலவாக்கரைவாடியில் தேர் திருவிழா

கீழக்கரை : கீழக்கரை அருகே அலவாக்கரைவாடியில் கருப்பட்டி முனியசாமி, பத்திரகாளியம்மன், முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி,தேர் உற்ஸவ விழா நடந்தது. ஆக. 7 அன்று காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.நேற்று முன்தினம் இரவு பால்குடம், வேல்காவடி, அக்னிசட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். பா.ஜ., தலைவர் தமிழிசை அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி தேரை பக்தர்களுடன் இழுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !