கடலுார் நாகம்மன் கோயிலில் செடல் பெருவிழா
ADDED :2975 days ago
கடலுார்: கடலூர் பஸ்
நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவிலில் செடல் உற்சவத்தையொட்டி பக்தர்கள் ஊசி
செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார் பஸ் நிலையத்தில்
நாகம்மன் கோவில் செடல் பெருவிழா 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவிலில் 10 நாட்கள் உற்சவமான செடல்
பெருவிழாவில் தினமும் தீபாராதனையும், அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. 9ம்
நாள் உற்சவமான செடல் பெருவிழா வான (17ம் தேதி) இன்று பக்தர்கள் ஊசி செடல்
போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில்
பக்தர்களுக்கு காட்சியளித்தார். 18ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவமும், 24ம்
தேதி உதிரவாய் நிகழ்ச்சியும் நடக்கிறது.