சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் மோட்ச தீபம்
ADDED :2654 days ago
சிதம்பரம்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் நான்கு கோபுரங்களிலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். அவரது ஆத்மா சாந்தி அடையும் பொருட்டு, சிதம்பரம் பா.ஜ., சார்பில், நடராஜர் கோவிலில் நான்கு கோபுரங்களின் உச்சியில் மோட்சத் தீபம் ஏற்றப்பட்டது. இதனையொட்டி, நடராஜர் சன்னதி சித்சபையில் நெய் தீபம் ஏற்றப்பட்டு, பின்னர் மாலை 6:30 மணிக்கு நான்கு கோபுரங்களின் உச்சியில் 196 அகல் மோட்சத் தீபம் ஏற்றப்பட்டது.