விருத்தாசலம் காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2702 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் காமாட்சி அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை செய்து, திருக்கல்யாணம் நடந்தது. விருத்தாசலம் மறைமலை அடிகள் தெருவில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் விழாக்குழுவினர் சார்பில் விஸ்வ பிரம்மா, காயத்ரி சுவாமிகளின் ஐம்பொன் சிலைகள் நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு மேல் இரண்டாம் கால பூஜை, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பகல் 12:00 மணிக்கு மேல் 1:30 மணிக்குள் விஸ்வ பிரம்மா, காயத்ரி சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.